நாளை காலையில் இலங்கை வரும் கொரோனா தடுப்பூசிகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தருவிக்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் நாளை காலை 11 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளன.

ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க இதனை சற்றுமுன்னர் செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்தார்.

நாளை காலை குறித்த தடுப்பூசிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் இந்திய அதிகாரிகள் கையளிக்கவுள்ளனர்.

500,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுகின்ற நிலையில், அவற்றை 250,000 பேருக்கு பயன்படுத்த முடியும்.

இந்த தடுப்பூசிகளை இலங்கையின் ஔடதக்கட்டுப்பாட்டு சபை மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பன அங்கீகரித்துள்ளன.

நாளை மறுதினம் முதல் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி, இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் அஸ்றாசெனீகா கொவிஷீல்ட் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

You may also like...