மீன் சந்தையில் விற்பனைக்கு வந்த அரியவகை கடல் பாம்பு

தமிழ் ​செய்திகள் இன்று


மீன் சந்தையில் விற்பனைக்கு வந்த அரியவகை கடல் பாம்பு

மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அரியவகை கடல் பாம்பு ஒன்றை, அம்மீனவர் மீன் விற்பனை நிலையத்துக்கு கொண்டு சென்ற சம்பவமொன்று, நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்துக்கே இந்த கடல் பாம்பை மீனவர் கொண்டு வந்ததாக மீன் வியாபார நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.

தாம் மீன்பிடிக்கும்போது தனது வலையில் சிக்கியது புதுவகை மீனாக இருக்குமோ எனும் சந்தேகத்தில் அதனை காண்பிப்பதற்காக குறித்த மீனவர், விற்பனை நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

அதனை பார்வையிட்ட ஏனைய மீனவர்கள், அது கடலில் உள்ள “அஞ்சாலை” எனும் 7 அடி உயரமும் 8 கிலோ எடையும் கொண்ட ஒருவகை பாம்பு என்று கண்டுபிடித்துள்ளனர்.