உயிர் தப்ப வீதியில் பாய்ந்த இளைஞன் உயிரிழப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


உயிர் தப்ப வீதியில் பாய்ந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த இளைஞன் தப்பிக்க முயன்று பாய்ந்ததாகவும் வீதியில் அவர் வீழ்ந்தபோது அருகே வந்த வாகனம் அவர் மீது மோதியதாலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிய வருகிறது.

விபத்தில் 25 வயதான மயூரன் என்பவர் உயிரிழந்ததுடன், அவரது சகோதரனும் விபத்தினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் அரியாலை பார்வதி வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.