நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கைது

தமிழ் ​செய்திகள் இன்று


நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கைது

நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 319 G கிராம சேவகர் அலுவலகத்துக்குச் சென்றிருந்த நபர் ஒருவரை நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் தாக்கியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் கிளங்கன் வைத்தியசாலையின் நேற்று (29) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்தத் தவிசாளரைக் கைது செய்யக்கோரி, பொகவந்தலாவ கெர்கஸ்வோல் தோட்ட மக்கள் இன்று (30) காலை முதல் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று (30) ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.