​பொது மக்களுக்கு வி​ஷேட அறிவிப்பு – 05 நாட்களுக்கு மூடப்படும்

தேசிய சுதந்திர தினத்திற்கு அமைவாக இடம்பெறும் ஒத்திகை நிகழ்ச்சியினால் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் விசேட வாகனப் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைவாக பொரளையிலிருந்து தாமரைக் கோபுர சுற்று வட்டம் வரையான வீதி இன்று தொடக்கம் எதிர்வரும் 5 நாட்களுக்கு மூடப்படும் என்று பொலிசார் அறிவித்துள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 5 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்குப் பதிலாக மாற்று வீதிகளைப் பயன்படுத்த முடியும். ஹோட்டன் பிளேஸ் ஊடாக விஜேராம மாவத்தை, வோர்ட் பிளேஸ், நகர மண்டபம், யூனியன் பிளேஸ் ஊடாக பயணிக்க முடியும்.

காலி வீதி, பௌத்தாலோக மாவத்தை என்பவற்றின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமையான முறையில் இடம்பெறும்.

 

You may also like...