மற்றொரு ஆணைக்குழுவை நியமித்த ஜனாதிபதி

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு மூவர் அடங்கிய விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு தொடர்பான விபரம் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக்க பிரியந்த சமரகோன் ஜயவர்தன, ஹேமா குமுதினி மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரத்னபிரிய குருசிங்க ஆகியோர் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் அடங்குகின்றனர்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

You may also like...