ஆன் சான் சூ கீ இராணுவத்தினரால் கைது

தமிழ் ​செய்திகள் இன்று


ஆன் சான் சூ கீ இராணுவத்தினரால் கைது

மியன்மார் நாட்டின் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவி ஆன் சான் சூ கீ இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் அந்நாட்டு பாராளுமன்றம் ஒன்று கூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு ஜனாதிபதி உட்பட மேலும் சில அரசியல் கட்சித் தலைவர்களையும் ராணுவத்தினர் இன்று காலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

இந்தநிலையில் ஆங் சான் சூகி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மியான்மரில் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.