காலி முகத்திடலில் காதலர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

தமிழ் ​செய்திகள் இன்று


காலி முகத்திடலில் காதலர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

காலி முகத்திடலில் இருந்த காதலர்கள் இருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

சுகாதார அதிகாரிகள் அந்த ஜோடிக்கு அவ்விடத்திலேயே நடத்திய அன்டிஜன் பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது.

இந்த விடயம் தெரியவந்தவுடன் தாம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டாம் என குறித்த காதலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனினும் மாற்று வழியில்லாமையினால் சுகாதார அதிகாரிகள் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

அங்கிருந்து அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் கடந்த வாரம் காலி முகத்திடலில் இருந்து பரவலாக தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.