ரணிலுக்கு விடைகொடுக்க தயாராகும் முக்கிய மூன்று பேர்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 03 முக்கிய உறுப்பினர்கள் விரைவில் விலகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோரே இவ்வாறு கட்சியிலிருந்து விலகிச் செல்லும் தீர்மானத்தை கூட்டாக எடுத்திருப்பதாக சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் கட்சி எதிர்கொண்ட பாரிய பின்னடைவை அடுத்து தலைவர் பதவியிலிருந்து தற்போதைய தலைவராகிய ரணில் விக்கிரமசிங்க விலகுவதாக அறிவித்திருந்தார்.

ஆனாலும், பலரது எதிர்பார்ப்பினை தோல்வியடையச் செய்யும் வகையில் அவர் அப்பதவியிலிருந்து இன்றுவரை விலகவில்லை.

மாறாக தனது மைத்துனராகிய ருவன் விஜேவர்தனவை பிரதித்தலைவர் பதவிக்கு உயர்த்தியிருக்கின்றார்.

இவ்வாறான சில காரணங்களால் அதிருப்தியடைந்துள்ள மேற்படி மூன்று உறுப்பினர்களும் விரைவில் கட்சியிலிருந்து விலகுவதற்கான அறிவிப்பை விடுக்கவுள்ளார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

You may also like...