வீர வசனங்களால் மாத்திரம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது

வீர வசனங்களால் மாத்திரம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்கால உலக நிலைமைக்கு முகங்கொடுத்து ராஜதந்திர சிக்கல்கள் வராமல் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போட்டித் தன்மைவாய்ந்த உலகில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே சவால்களை எதிர்கொள்ள முடியும் என நீதி அமைச்சர் கூறினார்.

கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டார்.

 

You may also like...