திருமண நிகழ்வுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை

தமிழ் ​செய்திகள் இன்று


திருமண நிகழ்வுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை

இலங்கையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை திறனாக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (05) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வைத்தியர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் மரணங்களில் 70 வீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் குறித்த வயதிற்கு உட்படவர்களுக்கிடையில் தொற்றாளர்கள் அதிகரிப்பின் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளில் அதிகளவான மக்கள் ஒன்றிணைவதால் தொற்று அதிகளிவில் பரவலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் எக்மோ சிகிச்சை குறிப்பிட்ட அளவில் இருப்பதால் அதனை அதிகரிக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.