மற்றொரு ஆடை தொழிற்சாலையில் 284 பேருக்கு கொரோனா

தமிழ் ​செய்திகள் இன்று


மற்றொரு ஆடை தொழிற்சாலையில் 284 பேருக்கு கொரோனா

மஹியங்கனை பகுதியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளின் ஊழியர்கள் 284 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை நகருக்கு அருகாமையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 108 பேருக்கும், மஹியங்கனை நகரில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் 176 பேருக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 894 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 61,461 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 339 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.