தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அந்த வகையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2.2 சதவீதம் சரிவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகளை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,790.33 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை கடந்த 30 நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4.56 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும், கடந்த மாதம் 27ஆம் திகதி இலங்கையில் 24 கரட் தங்கமானது (ஒரு பவுண்) 109,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் (ஒரு பவுண்) 99,900 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 163 ரூபாய் சரிந்து 46,738 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 4,673 ரூபாய்க்கு சரிந்துள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தூய தங்கம் 46,901 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like...