இம்ரான்கானின் இலங்கை விஜயம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


இம்ரான்கானின் இலங்கை விஜயம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வௌிவிவகார அமைச்சு இதனைக் கூறியுள்ளது.

எதிர்வரும் 23ம் திகதியும் அவர் நாட்டில் தங்கியிருந்து முக்கிய சந்திப்புக்களை நடத்த உள்ளதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மஹ்முட் சாட் கட்டாக் அண்மையில் கூறியிருந்தார்.