உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சிக்கப் போகும் மைத்திரி, ரணில் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள்

கடந்த 2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் நல்லாட்சி அரசின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அதன்படி அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் அப்போதைய தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஆரம்பகால எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியவர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்த தாக்குதல்களில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் 270 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

You may also like...