அடிப்படைச் சம்பளம் தொடர்பில் வௌியான விஷேட செய்தி

தமிழ் ​செய்திகள் இன்று


அடிப்படைச் சம்பளம் தொடர்பில் வௌியான விஷேட செய்தி

தேயிலைத் தொழிற்துறையின் தொழிலாளர்களுக்கு 1040 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தை வழங்குவதற்கு இன்று கூடிய வேதன நிர்ணய சபை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேதன நிர்ணய சபை இன்று கூடிய போது, அதன் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை வேதனத் தொகையான 405 ரூபாவைவிட அதிக தொகையினை பெருந்தொட்டத் தொழிலாளாகளுக்கு வேதனமாக வழங்குவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது.

எனினும், இந்த தொகையை மாற்றியமைக்கும் அதிகாரம் வேதனநிர்ணய சபைக்கு இருக்கின்றமையை சுட்டிக்காட்டிய தொழில் ஆணையாளர், தேயிலைத் தொழிற்துறை தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 900 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 140 ரூபாவும் வழங்குவதற்கான யோசனையை முன்வைத்தார்.

இதற்கு முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எதிர்ப்பை வெளியிட்டநிலையில், இந்த தொகைக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த வேதன தொகைக்கு ஆதரவாக 11 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீர்மானத்துக்கு ஆட்சேபனை இருப்பின் அதனை முன்வைப்பதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.