பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞன்

போலி ஆவணங்களை தயாரித்து வாகன விற்பனையில் ஈடுபடுகின்ற ஒருவர் கடுவலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மிரிஹான விசேட விசாரணை பிரிவினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலும் சில வாகன மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவருடன் தொடர்புடைய மேலும் பலர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் மேல் மாகாண கிழக்கு விசேட விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

You may also like...