மஹிந்தவை பதவி விலக கூறிய விமல் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்
பொதுஜன பெரமுனவின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்ய வேண்டும் என்று முன்மொழிந்த அமைச்சர் விமல் வீரவன்ச, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பொதுஜன பெரமுன கோரியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, உள்ளூர் வார இறுதி செய்தித்தாளிடம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுன தலைமைத்துவத்தில் இருந்து அகற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த அறிக்கை தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்கவோ அல்லது முடிவெடுக்கவோ வீரவன்சவுக்கு உரிமை இல்லை என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் வீரவன்ச பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துடன் அவர் தனது அறிக்கையையும் திரும்பப் பெற வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என்று காரியவம் தெரிவித்தார்.
விமல் வீரவன்ச தெரிந்து கொள்ள வேண்டும், இது அவரின் கட்சியும் இல்லை. எமது கட்சி விடயத்தில் தலையிடவும் உரிமை இல்லை என்பதை என்று அவர் கூறினார்.
விமல் வீரவன்ச இவ்வளவு தாழ்ந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.