காதலர் தின களியாட்ட நிகழ்வு தொடர்பில் DIG அஜித் ரோஹண கூறியது

காதலர் தினத்திற்காக சமூக வலைத்தளங்கள் ஊடாக சட்டவிரோத விருந்துபசாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த தினங்களில் பதிவான கொவிட் தொற்றாளர்கள் தொடர்பில் கருத்திற்கொள்ளும் போது விருந்துபசாரங்கள் மற்றும் திருமண வைபங்கள் ஊடாக கொரோனா தொற்று நோய் அதிகளவில் பரவியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொவிட் கொத்தணி மற்றும் இணை கொத்தணிகள் உருவாக அதிகளவில் வாய்ப்பு உள்ளதால் இணையத்தளம் ஊடாக சட்டவிரோத விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

அதேபோல், இதுபோன்று விருந்துகளுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் இடவசதியினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டாம் என பொலிஸ் ஊட பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You may also like...