ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் – பிரதமர்

கொவிட் 19 நோயால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றில் வைத்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது என்ற இரண்டிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மரிக்கார் எம் பியின் வாய்மூல வினாவொன்றுக்கு பதிலளித்தபோதே பிரதமர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

நிலத்தடி நீரின் ஊடாக கொரேனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லை என, கொரேனா ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோ புள்ளே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்குவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டார்.

You may also like...