ஜனாஸா அடக்கம் தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு அமெரிக்க தூதுவரின் பதில்

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தனது டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற நடைமுறையை முடிவிற்கு கொண்டுவரும் பிரதமரின் அறிவிப்பு குறித்து வெளியாகியுள்ள செய்தியை வரவேற்பதாக அவர் கூறியுள்ளார்.

சர்வதேச பொதுசுகாதார விழுமியங்கள் மற்றும் மத உரிமைகளை மதிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் திருத்தப்பட்ட நடைமுறைகளை நடைமுறைப்படுத்துதல் சாதகமானதொரு நடவடிக்கை என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்குவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

You may also like...