பொத்துவில் – பொலிகண்டி போராட்டம் அமெரிக்க தூதுவரின் ட்விட்டர் செய்தி

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் இலங்கையின் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்களின் பாரபட்ச தன்மையை சூட்சமாக கிண்டல் செய்துள்ளார்.

எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் இடம் பெறுவது முக்கியமானதும் உரிமையும் கூட அவற்றை நியாயமாக அக்கறையுடன் அணுக வேண்டும்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபயணி குறித்து தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது குறித்து அறிந்தேன்.

கொழும்பை அடிப்படையாக கொண்ட ஊடகங்கள் ஏன் இதற்கு பரந்துபட்ட முக்கியத்துவத்தை வழங்கவில்லை என ஆச்சரியப்பட்டேன் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

You may also like...