இலங்கையில் பாரிய அளவான இரத்தினக்கல் குவியல் கண்டுபிடிப்பு

எஹெலியகொட, கெட்டஹெத்த பிரதேசத்தில் இரத்தின கல் குவியல்கள் பொக்கிஷமாக கிடைத்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த இரத்தினகல் கொத்தணி எனப்படும் பொக்கிஷத்திற்குள் பாரிய அளவிலான இரத்தினகற்கள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான இரத்தினகல் பொக்கிஷத்தில் இருந்து இரத்தினகல் பெறும் நபர்கள் இது தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிட்டுள்ளனர். அந்த பொக்கிஷம் பல வடிவங்களாக எஹெலியகொட பிரதேச்த்தில் இருந்து கேகாலை வரையான பிரதேசம் வரை பரவி காணப்படுகின்றதுது.

இந்த இரத்தினகற்கள் அரச காணிகளுக்கு கீழ் அமைந்துள்ளது. அந்த காணிகளில் பயிர்செய்கை செய்வதற்கு விற்பனை அல்லது குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கலாம். அந்த காணிகளில் இருக்கும் இரத்தினகற்களுக்கு உரிமைக்கோர முடியாது.

இந்த இரத்தினகல் பொக்கிஷத்தை முழுமையாக அகழ்வு செய்ய வேண்டும். அதற்கான செலவினை இரத்தினகல் மற்றும் தங்க நகை அதிகார சபை மற்றும் தனியார் பிரிவு இணைந்து ஏற்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

You may also like...