கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எடுத்துள்ள தீர்மானம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதி இதுவரை தமக்குக் கிடைக்கப்பெறவில்லையென பேராயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தொிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தொிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பேராயர்,

சில விடயங்கள் தொடர்பில் உண்மை தன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் காரணமாக எமக்கு இதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விரைவில் குறித்த பிரதிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும். அப்பொழுது எமக்கு பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

You may also like...