2017ஆம் ஆண்டு பிலியந்தலை பகுதியில் வைத்து, காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபரான மொஹமட் மாஹிர் மொஹமட் நவாஸ் என்பவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னர் அவர் இந்தியாவிற்கு தப்பிச்சென்றார்.
இந்த நிலையில், இந்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அவர், மதுரையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச காவல்துறையின் இந்திய கிளையால், இலங்கையிலுள்ள சர்வதேச காவல்துறை கிளைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த நபரை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகள் இடம்பெறுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.