விமல் வீரவன்ச எப்பொழுதும் குழப்பக்காரர்

தமிழ் ​செய்திகள் இன்று


விமல் வீரவன்ச எப்பொழுதும் குழப்பக்காரர்

விமல் வீரவன்ச வரலாற்றில் தான் இருக்கும் அணியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது பிபி.ஜயசுந்தரவை பொருளாதார கொலையாளி எனக் கூறி குழப்பத்தை ஏற்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச தற்போது கட்சிகளுக்கு இடையேயும் கட்சிக்கு உள்ளேயும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த அரசாங்கத்திற்கு யாரும் உரிமை கோர முடியாது எனவும் அனைவரும் ஒன்றிணைந்தே இதனை உருவாக்கியதாகவும் சனத் கூறியுள்ளார்.

விகாரைக்கு கவிதை பாட ஒருவரை கூலிக்கு அழைத்து வந்தால் கூலியை கொடுத்து அவர் திருப்பி அனுப்பி வைக்கப்படுவாரே தவிர விகாரை அவருக்கு எழுதிக் கொடுக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.