விமல் வீரவன்சவின் மனைவி CID யில் செய்த முறைப்பாடு

அமைச்சர் விமல் விமல் வீரவன்சவின் மனைவி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளில் தான் மற்றும் தனது பிள்ளைகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வெட்கமான செய் காரணமாக தான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும் கணவர் விமல் வீரவன்சவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து அவர் எவ்வித கருத்துக்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுப்புத் தெரிவித்தார்.

You may also like...