எதிரணிக்கு ரணில் கூறியுள்ள முக்கிய அறிவுரை

இந்த சந்தர்ப்பத்தில் ஆட்சியை கைப்பற்ற யோசிக்கக் கூடாது என்றும் ஆட்சியை கைப்பற்றினால் ஏற்படுவது அழிவு என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் எதிர்க்கட்சி எந்த முறையிலாவது ஆட்சியை கைப்பற்றினால் அவர்களுக்கு மேலும் 10 வருட காலத்திற்கு அதிகாரம் குறித்த எண்ணத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹரின் பிரணாந்து, மனுஷ நாணயக்கார மற்றும் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட சமகி ஜன பலவேகய எம்பிக்கள் சிலருடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

சமகி ஜன பலவேகய மற்றும் ஐக்கிய தேசிய கட்சி எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கவும், அந்த கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு SJB எம்பிக்கள் UNP தலைவருக்கு யோசனையை முன்வைத்துள்ளதுடன் அது தொடர்பாக தனக்கு தனியாக தீர்மானம் எடுக்க முடியாது எனவும் அந்த யோசனையை கட்சியில் முணைவைப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

 

You may also like...