​கொச்சிக்கடை தேவாலயத்திற்கு வந்த மொட்டை கடிதம் – விசாரணை தீவிரம்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் தாக்குதல் இடம்பெறலாம் என்கிற மொட்டை கடிதம் காரணமாக புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலைகள் உட்பட மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அநாமதேய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் துறைமுக பொலிஸாரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் அண்மையில் கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு கிடைத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக குறித்த சிலரினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புலனாய்வு விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

 

You may also like...