ஜனாஸா எரிப்பு விவகாரம்; பிரதமரை விட அதிகாரம் படைத்தவர் யார்?

இன்று(13) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வோலு குமார் தெரிவித்த கருத்துக்கள்.

இன்று அரசாங்கத்தின் சகல விவகாரங்களிலும் சிக்கல் நிலை ஏற்ப்பட்டுள்ளது.குறிப்பாக இலங்கையின் வெளிவிவகார உறவுகளில் பாரிய சிக்கல் நிலையை ஏற்ப்படுத்தியுள்ளனர்.அரச செத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்க மாட்டோம் என்று கூறிவர்கள் இந்தியாவிற்கு துறைமுக கிழக்கு முனையத்தை வழங்குவதாக தெரிவித்து சீனா சார்ப்பாக செயற்படுகின்றனர்.

இந்தியாவுடனான நம்பிக்கையை கொச்சைப்படுத்தியுள்ளனர். இன்று இந்தியாவுடன் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் பெற்றோல் ஊற்றும் விதமாக பாகிஸ்தான் பிரதமரை இலங்கைக்கு அழைத்து பாராளுமன்றத்தில் உரையாற்றவும் கொடுத்துள்ளனர்.

ஜெனிவாவில் இலங்கைக்கு பலத்த தோல்விகள் காத்திருக்கின்றன.சில போது பொருளாதார தடைகளைக் கூட அது சார்ந்த சிக்கல்களை சந்திக்க இலங்கை நேரிடும்.

இந்தியாவுடன் நல்லறவைப் போன வேண்டும்.வெளிவிவகார கொள்கைகளை சரி செய்ய இந்த அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த அரசாங்கத்தின் தலைவர் பெறுப்பெடுப்பவர், தீர்மானங்களை எடுப்பவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.ஏனெனில் அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமர் கொவிட் மரணங்களை புதைப்பதற்கு அனுமதிப்பதாக தெரிவித்து சில மணித்தியாலங்களில் சுதர்ஷனி பெர்னான்டோ மாறுபட்ட கருத்தைக் கூறினார்.

பின் வரிசை அங்கத்தவர்கள் மாறுபட்ட முற்றும் நேர் எதிரான கருத்துக்களைக் கூறுகின்றனர். பிரதமரையும் விட அதிகாரம் படைத்தவர்கள் யார் என்று வினவுகிறோம்.

விமல் வீரவங்சவின் வீட்டில் கட்சித் தலைவர்கள் அடிக்கடி சந்தக்கின்றனர்.அரசாங்கத்தில் உள்ளக ஸ்திரத்தன்மை வலுவற்றதாக மாறி வருகிறது.

பந்துல குணவர்தன 23 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக வர்த்தமானி வெளியிட்டுள்ளார்.ஆனால் சந்தையில் பொருட்கள் இல்லை. சதொசவில் மாத்திரம் தான் இந்த விலைக்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும்.

அதிலும் ஓருவருக்கு 1 கிலோ வீதம் தான் வழங்குகின்றனர்.வர்த்தமானியால் நுகர்வோர் அதிகார சபைக்கும் பாரிய தலையிடி ஏற்ப்ட்டுள்ளது. அவர்கள் மக்கள் பக்கம் நிற்பதா? அல்லது அரசாங்கத்தின் பக்கம் நிற்பதா?
இது மக்களை ஏமாற்றும் செயல்.

மறுபக்கம் நாட்டில் சுற்றாடல் மிக மோசமாக பாதிக்கப்ட்டு வருகிறது.காடழிப்பு தொடராக இடம் பெறுகிறது. 5000 ஏக்கர் வனப்பகுதியைப் பாதுகாக்க ஆதி வாசித் தலைவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.முறைகோடான காடழிப்பை தடை செய்ய அரசாங்கம் சட்டத்தை பிரயோகிப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.

You may also like...