ஜனாஸாக்களை அடக்கம் செய்ய டிசம்பரிலேயே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது

கோவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய கடந்த டிசம்பரில் பொருத்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் – 19 தொற்றினால்பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்க சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான மூத்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, கோவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டையும் அனுமதிக்கும் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

கோவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய கடந்த டிசம்பரில் பொருத்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like...