பெரும்பான்மையினரின் மதம் பௌத்தம் – இலங்கையின் பெயர் மாற்றப்படும்

தமிழ் ​செய்திகள் இன்று


பெரும்பான்மையினரின் மதம் பௌத்தம் – இலங்கையின் பெயர் மாற்றப்படும்

புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இலங்கையின் பெயர் சிறி லங்கா குடியரசு என்று மாற்றப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடு ஜனநாயகமாகவோ அல்லது சோசலிசமாகவோ இருக்க வேண்டும். ஆனால் பெயர்களால் அல்ல, எனவே நாட்டின் பெயரை இலங்கை குடியரசாக மாற்ற வேண்டுமென முன்மொழிந்தார்.

இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாக இருக்க வேண்டும் என்றும் வெளி சக்திகள் நாட்டை பிளவுபடுவதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

2,300 ஆண்டுகளாக பௌத்தம் நாட்டின் பெரும்பான்மையினரின் மதமாக உள்ளது என்றும், அதேபோல் பௌத்த மதத்தை இலங்கையின் அரச மதமாக மாற்ற வேண்டும் எனவும், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீக்குவதற்கும் பொதுத் தேர்தலின் மூலம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கும் தமது முன்மொழிவை செய்துள்ளார்.