பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்த அவசர எச்சரிக்கை

இன்றைய தினம் கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு இணையத்தளம் ஊடாக பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெறுவது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காதலர் தினமான இன்று இனந்தெரியாதவர்களால் கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும் குறுந்தகல்களை நம்ப வேண்டாம் என பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது.

காதலர் தினத்திற்காக பெறுமதியான பரிசுகள் வெல்லப்பட்டுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள ஒரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறும் அந்த குறுந்தகவல்களில் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனினும் இதுபோன்ற குறுந்தகவல்கள் மோசடியாளர்களால் அனுப்பப்படலாம் எனவும் அதனை நம்பி பணத்தினை வைப்பிலிட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உங்களுக்கு உங்கள் காதலன் அல்லது காதலி பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டு அந்த குறுந்தகவல் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

அதற்கான பரிசு புகைப்படம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிக்கலாம். அதில் காதலன் அல்லது காதலிக்கு தொடர்புடைய புகைப்படங்களும் இருக்கலாம்.

அதற்காக ஒரு தொகை பணத்தை வைப்பிடுமாறு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை நம்பி பணம் வைப்பிட வேண்டாம் என இலங்கை இளைஞர் யுவதிகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like...