உலக நாடுகளுக்கு மீண்டும் வந்த கடுமையான எச்சரிக்கை

உலக நாடுகளுக்கு உலக சுகாதார தாபனத்திடம் இருந்து மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

​கொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும், எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது, அதற்கான தருணம் வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ந்து நான்காவது வாரமாக கோவிட் வைரஸ் பெருந்தொற்று பரவல், உலக அளவில் குறைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 2-வது வாரமாக கொரோனா உயிர்ப்பலி எண்ணிக்கையும் சரிந்துள்ளது.

பல நாடுகளிலும் பொதுச் சுகாதார நடவடிக்கைகளை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருவதனாலேயே இது குறைகின்றது என்று தோன்றுகிறது.

உலக சுகாதார தாபனத்தின் தலைவருக்கே கொரோனா?

இதற்காக நாம் ஊக்கம் அடையலாம். ஆனால் இதில் மன நிறைவு கொள்வது என்பது அந்த வைரசைப் போலவே ஆபத்தானது.

தற்போது கட்டுப்பாடுகளை எந்த நாடுகளும் தளர்த்தும் தருணம் எந்த நாட்டுக்கும் வரவில்லை.

எனவே கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது. அதே போன்று எந்த தனிநபரும் கோவிட் கால பாதுகாப்பு அம்சங்களை குறைப்பதற்கான தருணமும் இது அல்ல.

தடுப்பூசிகள் தயாரிப்பு தொடங்கி உள்ள நிலையில் நேர்ந்துள்ள ஒவ்வொரு உயிரிழப்பும் மிகுந்த சோகத்துக்குரியதுதான்.

கொரோனா எப்போது முடிவுக்கு வரும் – உலக சுகாதார தாபனத்தின் செய்தி

கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றி ஆராய வுஹான் நகருக்கு சமீபத்தில் உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு சென்றது.

அவர்கள் கண்டறிந்துள்ளவை குறித்து அடுத்த வாரம் அறிக்கை வெளியிடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like...