சகல பாடசாலைகளுக்கும் விதிக்கப்பட்ட தடை

தமிழ் ​செய்திகள் இன்று


சகல பாடசாலைகளுக்கும் விதிக்கப்பட்ட தடை

சகல பாடசாலைகளுக்கும் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை பாடசாலைகளில் விழாக்கள், நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு, மீள் அறிவித்தல் வரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் கல்வியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வியைமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.