முத்தையா முரளிதரன் தொடுத்த வழக்கு; அமைச்சர் நாமலுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

தமிழ் ​செய்திகள் இன்று


முத்தையா முரளிதரன் தொடுத்த வழக்கு; அமைச்சர் நாமலுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

முத்தையா முரளிதரன் தொடுத்த வழக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட சிலருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்தினத்திற்கு புதிய அரசியலமைப்பு ஒன்றை தயாரிக்குமாறு தாக்கல் செய்த மனு தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக மார்ச் மாதம் 15 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களை எதிர்வரும் மார்ச் 15ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய கிரிக்கெட் யாப்பொன்றை உருவாக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொறயா ஆகிய நீதிபதிகள் குழாமினால் இம்மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சிதத் வெத்தமுனி உள்ளிட்ட 12 பேர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.