உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குண்டை வெடிக்க வைத்தது சஹ்ரான், தூண்டியது யார்?

தமிழ் ​செய்திகள் இன்று


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குண்டை வெடிக்க வைத்தது சஹ்ரான், தூண்டியது யார்?

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தத் தூண்டியது யார் இன்ற கேள்விக்கே பதில் தேவை என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரையில் குற்றவாளிகள் யார் என்பது வௌியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குண்டு வெடிக்கச் செய்தது சஹ்ரான் என்றாலும் குண்டு வைக்கத் தூண்டியவர்கள் யார் என்பதே அவசியமாக உள்ளதென அவர் கூறினார்.

ஆனால் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூறுவது போல விசாரணை அறிக்கை பரிந்துரையில் குற்றவாளிகள் அல்லாத நிலை இருப்பதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

வேறு நபர்கள் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்த குண்டை போட்டது மைத்திரிபால சிறிசேனவோ ஞானசார தேரரோ இல்லை என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.