சாய்ந்தமருது ஜனாஸாவை எரிக்கத்தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சாய்ந்தமருது எம்.எம். ஆதம்பாவா என்பவர் கடந்த 12.02.2021ம் திகதி அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்திருந்தார்.

மரணமடைந்த நபருக்கு கொரோனா தொற்றுள்ளாதாக வைத்தியசாலை நிருவாகத்தால் கூறப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கு அவ்வாறான தொற்று ஏற்படக்கூடக்கூடிய எந்த வாய்ப்பும் இல்லை என்ற காரணத்தினால் அவரது மரணத்தில் வலுவான சந்தேகம் உள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் 15.02.2021ம் திகதி இது தொடர்பான வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது மரண விசாரணை இன்றி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் இன்றைய தினம் 16.02.2021 கல்முனை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவில் சிரேஸ்ட சட்டத்தரனி எஸ்.எஸ். அப்பாசி, சட்டத்தரனி முகைமீன் காலித், சஞ்சித், ஜைளபீர் மற்றும் சட்டத்தரனி றதீப் அகமட் அகியோர் அஜராகி குறித்த ஜனாசா தொடர்பில் நீண்ட வாதங்களை முன்வைத்திருந்தனர்.

மனுதாரர் சார்பாக சட்டத்தரணிகளால் செய்யப்பட்ட சமர்ப்பணத்தினை ஏற்றுக்கொண்ட கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி ஶ்ரீனிதி நந்தசேகரம் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கும் குறித்த ஜனாசாவை எதிர்வரும் மார்ச் 18 வரை எரிக்காது அவ்வாறாவே வைத்திருக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிதிருந்ததுடன் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பினார்.

You may also like...