தகனம் செய்வதே முடிவு – அடக்கம் செய்ய தீர்மானமில்லை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை தகனம் செய்வதே தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவேண்டுமென்ற தனது தனிப்பட்ட விருப்பத்தையே பிரதமர் வெளிப்படுத்தினார் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவில் மூன்றாம் நபர்கள் அல்லது அரசியல்வாதிகள் தலையிடமுடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் வரை தற்போது காணப்படும் நடைமுறையான தகனம் செய்வதே தொடர்ந்தும் பின்பற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் பரவியுள்ள நிலையில் பலர் மீண்டும் நாடு முடக்கப்படுமா என கேள்வி எழுப்புகின்றனர்.

எனினும் நாட்டை மீண்டும் முடக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில, நாடு முடங்கினால் பொருளாதாரம் வீழ்ச்சியமடையும் என்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், ஏற்கெனவே இரண்டு மாதங்கள் முடக்கப்பட்டதால் அரசாங்கம் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியதாகவும் அவ்வாறான தீர்மானத்தை மீண்டும் எடுக்கப்போவதில்லை என்றும் கூறினார்.

You may also like...