பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் வீட்டில் பொலிஸார்

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கான பொலிஸார் அவரது இல்லத்திற்குச் செனறுள்ளனர்.

பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்து, “சட்டத்தை மீறினேன்” என்று குற்றச்சாட்டி, எனது வாக்குமூலத்தை பெறவேண்டும் என ஸ்ரீலங்கா பொலிஸ் (எனது காவலர் மூலமாக) எனக்கு அறிவித்துள்ளது. “வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெறுங்கள். நேரம் தருகிறேன்.” என்று கூறியுள்ளேன்.

இவ்வாறு மனோ கணேசன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ளார்.

அதன்படி இன்று காலை பொலிஸார் அவரது இல்லத்திற்குச் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அதன்பின்னர், “மாங்குளம் பொலிஸ், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் AR154/21 என்ற இலக்கத்தின் கீழ் பெற்றதாக கூறப்படும் தடையுத்தரவை நான் பெப்.6ம் திகதி மீறினேன் என்பதே குற்றச்சாட்டு.

எழுத்து மூலமாக, இலங்கை பொலீசுக்கு நான் கொடுத்த வாக்குமூலம் ஊடகங்களுக்கு விரைவில் வெளியிடப்படும்.” என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

 

You may also like...