பொதுபல சேனா அமைப்பை தடை செய்ய பரிந்துரை – நாட்டில் மற்றொரு தாக்குதல் நடக்கும்

தமிழ் ​செய்திகள் இன்று


பொதுபல சேனா அமைப்பை தடை செய்ய பரிந்துரை – நாட்டில் மற்றொரு தாக்குதல் நடக்கும்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்,

பாராளுமன்றம் செல்கிறார் ஞானசார தேரர்?

“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, எங்களைக் குற்றவாளியாக்கியுள்ளது. எம்மை குற்றவாளியாக்க, நாம் என்ன தவறிழைத்தோம்.

விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, இவ்வாறு மோசமாக இருக்குமெனத் தான் நினைக்கவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், இப்போது நிறைய வீரர்கள் உருவாகியுள்ளனர்.

இவ்வாறான தாக்குதல் நாளையும் நடக்கலாம். ஏனெனில், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர்.

வரவிருக்கும் பேரழிவிலிருந்து முழுநாட்டையும் பாதுகாக்க பொதுபலசேனா பல திட்டங்களைச் செயற்படுத்தியது. எனினும், தற்போது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் எடுத்துள்ள அதிரடி முடிவு

அலி சப்ரி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

‘தேவையற்ற ஆட்டம் போடும் அலி சப்ரி குறித்து, உடனடியாகத் தீர்மானம் எடுத்து, காதைப்பிடித்து ஜனாதிபதி வெளியே தள்ள வேண்டும்.

ராஜபக்ஸர்களின் வழக்குகளை விசாரித்ததற்காக, இவருக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டுமா, அதை விடத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர்’ என்றார்.

தேசத்தின் தலைவிதியைக் காப்பாற்ற, சிறைக்குச் சென்றவர்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுவென்றால், இந்த அறிவியலற்ற முறை குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

ஜனாதிபதிக்கு மாத்திரமே, இப்போது கையளிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் உள்ளவை, ஓரிரண்டு ஊடகங்களில் எவ்வாறு வெளிவருகின்றன எனக் கேட்டார்.

இந்த நாடு மஹிந்தவின் பரம்பரை சொத்தல்ல – ஞானசார தேரர் கடும் சீற்றம்

இவ்வாறான தாக்குதல் நாளையும் நடக்கலாம். ஏனெனில், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர்.
நேரத்துக்கு ஏற்றவாறு அலி சப்ரி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடித்தாடிக் கொண்டிருக்கின்றோம்.

இந்தக் கலந்தரையாடலை, வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், அலி சப்ரி நாட்டின் தலைவர் அல்லவே; அவர் நீதியமைச்சர் மாத்திரமே என்றார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுபலசேனா அமைப்பை தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.