பேஸ்புக் மூலம் இளைஞனை மயக்கி கொலை செய்த யுவதி

பேஸ்புக் மூலம் இளைஞனை மயக்கி  கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சீதுவ – ரன்தொலுவ, முத்துவாடிய பகுதியில் இளைஞன் ஒருவனைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் 22 வயதான யுவதி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன,

குறித்த இளைஞன் கடந்த 8ம் திகதி கடத்தப்பட்டதாகவும், அவரது உடல் நிக்கவரெட்டிய பகுதியில் உள்ள கோட்டவேஹர பகுதியில் இருந்து நேற்று மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் மாத்தறை – மக்கோன பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இளைஞனுக்கு சொந்தமான மாத்தறையில் உள்ள ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த நபரால் பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் வாடகை காலத்தை நீடிக்க முயன்றபோது தனிப்பட்ட தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் 22 வயது பெண்ணை பேஸ்புக் மூலம் பாதிக்கப்பட்டவருடன் நட்புகொள்ள பயன்படுத்தியதாகவும், அவரை சீதுவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு வரவழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீதுவவிற்கு வந்த இளைஞர்கள் குழுவினரால் கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டனர், அவரது உடல் கோட்டவேஹரவில் உள்ள வனப்பகுதியில் விட்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்கள் ஐவரும் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக சீதுவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

You may also like...