மத்ரசா பாடசாலையின் அதிபரை கைது செய்ய CID

மத்ரசா பாடசாலையின் அதிபர் மொஹமட் சகீல் என்பவர் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மத்ரசா பாடசாலையின் அதிபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் அவரை இவ்வாறு கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

You may also like...