முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களிடம் கசையடி பெற வேண்டும்

தமிழ் ​செய்திகள் இன்று


முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களிடம் கசையடி பெற வேண்டும்

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களிடம் கசையடி வாங்கிக் கொள்ள வேண்டுமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடரும் அவரின் கருத்தில்,…

சகல தவறுகளையும் சந்தர்ப்பங்களில் செய்து விட்டு மன்னிப்பு கேட்பதில் அர்த்தமில்லை. தேர்தல் காலங்களில் இஸ்லாமிய நடைமுறைகளை கூறி வாக்குகளை பெற்றவர்கள் அதை மீறிவிட்டு தப்பமுடியாது.

எனவே முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் மக்களிடம் இனியாவது இஸ்லாமிய தண்டனையான கசையடி வாங்கிக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தனியார் விடுதியில் நடைபெற்ற போதே அங்கு இவ்வாறு கூறினார்.