கடல் வழியாக இலங்கையில் நுழைந்த பிரான்ஸ் பிரஜைகள் கைது

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைந்த நான்கு பிரான்ஸ் நாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம மிரிஸ்ஸ கடற்கரைக்குள் நுழைந்த கப்பலுடன் சேர்த்து நான்கு பிரான்ஸ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி பயணித்தமை காரணமாக சந்தேகத்தின் அவர்கள் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பலின் மாலுமி, ஆண்கள் இருவர் மற்றும் மாலுமியின் மனைவியும் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 7 நாட்களுக்கு முன்னர் பிரான்ஸில் இருந்து வந்த இந்த குழுவினர் எரிபொருள் முடிந்து விட்டதாக கூறி அதனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெலிகம மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

67 மற்றும் 80 வயதிற்குட்பட்ட நபர்கள், மிரிஸ்ஸ கடல் பாதுகாப்பு முகாம் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பிரான்ஸ் நாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கை கடற்கரைக்குள் நுழைந்தமை சட்டவிரோத செயலாகும். இதனையடுத்து அவர்களுக்கு எதி்ராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You may also like...