ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில்

ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ரஞ்சன் ராமநாயக்க இன்று வெள்ளிக்கிழமை அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவப் பரிசோதனைக்காக சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் இன்று பகல் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் என எமது செய்தியாளர் கூறினார்.

ரஞ்சன் ராமநாயக்க சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் பொது வௌியில் தோன்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ரஞ்சன் ராமநாயக்க

ரஞ்சன் ராமநாயக்க

 

You may also like...