இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் திடீரென குறைவடைய காரணம்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் திடீரென குறைவடைந்துள்ளமை குறித்து கருத்து வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது.
PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையினால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் திடீரென குறைவடைந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடும் பணிகளில் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளமையினால் PCR பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 800 – 900 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 500 இற்கும் குறைவான தொற்றாளர்களே அடையாளம் காணப்படுகின்றனர்.
பல இடங்களில் PCR பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் எடுக்கப்பட்ட PCR பரிசோதனைகள் முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை.
3 – 10 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் இன்னமும் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.