O/L பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு

O/L பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

இதுவரையில் க.பொ.த. சா/த பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தை அணுகுமாறு கோரப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இதுவரையில் அனுமதி அட்டை பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் www.doenets.lk இணையத்தளத்திலிருந்து தமக்குரிய அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்யலாமென பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை இலக்கத்தை உள்ளீடு செய்து, அனுமதி அட்டையின் பிரதியொன்றை பெற்றுக்கொள்ளலாம்.

இதேவேளை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், மாணவர்களுக்கான சில அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கொவிட் 19 பரவல் காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளதால், பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பரீட்சை நிலையத்துக்கு வருகைதர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்- ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு. இவை இல்லாதவர்கள் பரீட்சைகள் ஆணையாளரால் உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படத்துடனான கடிதத்துடன் பரீட்சைக்கு நிலையத்துக்கு வருகைதர வேண்டும்.

பரீட்சை மண்டபத்துக்கு முன்னராக வருகைதந்து அனுமதி அட்டை, விண்ணப்பித்த பாடம், பாட இலக்கம் என்பவற்றை சரிபார்த்தல் வேண்டும்.

அனுமதி அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய onlineexams.gov.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து அதனை சீர்செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...