சிறுமியை திருமணம் செய்துகொண்ட வயதான எம்பி
பாடசாலை செல்லும் சிறுமியை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின்- பலோச்சிஸ்தானை சேர்ந்த ஜாமியாத் உலெமா இ-இஸ்லாம் கட்சியின் அரசியல் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் மௌலானா சலாஹுதின் அயுபி அதே பலோச்சிஸ்தானை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மௌலானா சலாஹுதின் அயுபிக்கு 50 வயதிற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமணம் செய்துவைக்கப்பட்ட 14 வயது சிறுமி ஜுகூர் அரசு மேனிலை பள்ளியில் படித்து வருவதாகவும் சிறுமியின் பிறந்த தினம் 2006ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் 16 வயதுக்கு கீழான பெண்களை திருமணம் செய்துவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக கட்டாய திருமணம் செய்துவைக்கும் பெற்றோர்களுக்கும் தண்டனை வழங்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுமி 16 வயதை எட்டும் வரை திருமணம் செய்துவைக்கமாட்டோம் என அவரது பெற்றோர் உறுதியளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.