பௌத்த சட்டத்தில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது

நவம்பர் மாதமளவில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கும் ஆண்களுக்கு இருக்கின்ற அதே சமஉரிமையை பெற்றுக் கொடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பௌத்த விஹாரைகள் தொடர்பான சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என்று நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

2500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பௌத்த நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சட்டத்தை மாற்றுவதற்கான எந்தத் தேவையும் கிடையாது என அவர் வலியுறுத்தினார்.

நீதி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார். தாம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு தவறாக விளக்கம் அளிக்க சிலர் முயன்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் பற்றி இலங்கையின் சட்டமா அதிபர், சிங்கப்பூர் சட்டமா அதிபரோடு கலந்துரையாடி இருப்பதாக அமைச்சர் அலி சப்ரி கூறினார்.

 

You may also like...